shadow

திடீர் திருப்பம், தளபதி 65 படத்தை முருகதாஸ் இயக்கவில்லை: லோகேஷ் தான் இயக்குனர்\\

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 64வது படமான மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அவரது அடுத்த திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளார் என்றும் இந்த படம் கத்தி 2’ அல்லது துப்பாக்கி 2’ என்றும் கூறப்பட்டு வந்தது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஏஆர் முருகதாஸ் ’தளபதி 65 படத்தை இயக்கவில்லை என்றும் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் இயக்க இருப்பதாகவும் தற்போது செய்திகள் கசிந்து வருகிறது
மாஸ்டர் படத்தை முடித்தவுடன் கமலஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த படம் தற்போதைக்கு இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், அந்த கதையை அப்படியே விஜய்யிடம் லோகேஷ் கனகராஜ் கூறியதாகவும் இந்த படத்தை உடனே தொடங்கலாம் என்று விஜய் பச்சைக்கொடி காட்டி விட்டதாக கூறப்படுகிறது. எனவே இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *