தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடனான ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்காக தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், பொதுஇடங்களில் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.