உள்ளாட்சி தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட அதிமுக-திமுக முடிவா? அதிர்ச்சி தகவல்

அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் ஒரு விஷயத்தில் ஒத்த போனதாக வரலாறு இல்லை. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இரு கட்சிகளும் மாற்றுக் கருத்துக்களை தெரிவித்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது

ஆனால் உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை இரண்டு கட்சிகளும் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளதாகவும் இரண்டு கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒற்றுமையுடன் செயல்பட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது

உள்ளாட்சி தேர்தலை தற்போது சந்திப்பது இரு கட்சிகளும் தங்களது பாதகமான அம்சங்கள் என கருதுவதாக கருதுவதால், உள்ளாட்சி தேர்தலை ஏதாவது ஒரு காரணம் காட்டி நிறுத்த இரு கட்சிகளும் முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இரண்டு கட்சிகளின் முன்னணி தலைவர்கள் சமீபத்தில் சந்தித்து உள்ளாட்சித் தேர்தலை தற்போது நடத்த வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதாகவும் இதனை அடுத்து விரைவில் ஏதாவது ஒரு கட்சி நீதிமன்றத்திற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் இதனை காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தலை அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகிற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply