“பெண்ணுடன் ‘லிவிங் டு கெதர்’: சபல ஆண்களுக்கு வலைவிரிக்கும் கும்பல்

5000 ரூபாய் கொடுத்தால் இளம்பெண்ணுடன் லிவிங் டுகெதர் ஆக வாழலாம் என மோசடி கும்பல் ஒன்று சபல ஆண்களுக்கு வலை விரிக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு ஆடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

சபலமுள்ள ஆண்களை கண்டுபிடித்து அவர்களிடம் இளம்பெண்களுடன் ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை லிவிங் டுகெதர் ஆக வாழலாம் என்றும் அதற்குரிய பணத்தை கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்றும் கூறி ஆசை காட்டுகின்றனர்

இந்த மோசடி கும்பல் விரிக்கும் வலையில் விழும் ஆண்கள் முதலில் 5000 ரூபாய் அனுப்புகின்றனர். அதன்பின்னர் பெண்ணை அனுப்ப வேண்டுமானால் கூடுதலாக 5000 ரூபாயை அனுப்ப வேண்டும் என்று கூறுகின்றனர். ஒருசிலர் சுதாரித்து அனுப்பாமல் சுதாரித்துள்ளதாகவும், ஒரு சிலர் மீண்டும் அனுப்பியதாகவும் தெரிகிறது.

இவ்வாறு மோசடி கும்பல் பணத்தை பறித்துக் கொண்டு அதன் பின்னர் எந்த பெண்ணையும் அனுப்பாமல் ஏமாற்றி விடுவதாக கூறப்படுகிறது. இந்த மோசடி கும்பலை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply