shadow

black moneyசுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் வைத்துள்ள 627 பேரின் பெயர்ப் பட்டியலை இன்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் யார் யார்? என்பதை தெரிந்து கொள்ள டெல்லி ஊடகங்கள் முயற்சிகள் எடுத்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

சுவிஸ் போன்ற வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு ஆரம்பித்து அதில் கணக்கில் வராத கருப்புப் பணத்தை பதுக்கியுள்ள 627 பேரின் பெயர் பட்டியலை மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று சமர்ப்பித்துள்ளது.

சீலிடப்பட்ட உரையில் வைத்து முழுப்பட்டியலை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி சுப்ரீம் கோர்ட்டின் இன்று காலை தாக்கல் செய்தார்.

அந்த பட்டியலில் உள்ள ஆவணங்கள்  3 பகுதிகளாக தாக்கல் செய்யப் பட்டுள்ளதாகவும், அந்த பட்டியலில் மொத்தம் 627 பேர்களின் பெயர் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மற்ற நாடுகளிலிருந்து முழு தகவல் கிடைக்கும் வரை சுப்ரீம் கோர்ட் இந்த நபர்களின் மீது நடவடிக்கை கூடாது என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த 627 பேர் பெயர்ப்பட்டியலில் இருப்பவர்கள் எத்தனை பேர் அரசியல்வாதிகள் என்பதை தெரிந்து கொள்ள ஊடகங்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன.

Leave a Reply