shadow

பயிற்சியாளரை கடித்து குதறிய சிங்கம். சர்க்கஸ் நிகழ்ச்சியில் நடந்த பயங்கரம்

1எகிப்து நாட்டில் சர்க்கஸ் நிகழ்ச்சியின்போது நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் முன் பயிற்சியாளரை சிங்கம் ஒன்று கடித்து குதறிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

எகிப்து நாட்டில் அலெக்சாண்டிரியா பகுதியில் நடைபெற்ற சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றில் சிங்கங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது 35 வயது ஷாகீன் என்ற பயிற்சி வீரர் கூண்டிற்குள் இருந்தார்.

சிங்கங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்று வந்தபோது திடீரென ஒரு சிங்கம் பயிற்சியாளர் மீது பாய்ந்து அவரை கடித்து குதற தொடங்கியது. பார்வையாளர்கள் முன்பே நடந்த இந்த சம்பவத்தால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தன்ர. உடனடியாக பதற்றமடைந்த மற்ற பயிற்சி வீரர்கள் சிங்கத்தை விரட்ட முயன்றனர். ஆனாலும் அந்த சிங்கம் பயிற்சியாளரை தொடர்ந்து தாக்கியது.

பத்து நிமிடத்திற்கு பின்னர் சிங்கங்கள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டது. ஆனால் படுகாயம் அடைந்த பயிற்சியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் படுவேகமாக பரவி வருகிறது.

Leave a Reply