லிங்குசாமி மீண்டும் ரிஸ்க் எடுப்பது சரியா?
lingusamy
லிங்குசாமி இயக்குவதாக இருந்த சண்டக்கோழி 2′ திரைப்படம் திடீரென கேன்சல் ஆனதற்கு காரணம் அல்லு அர்ஜூன் படத்தை இயக்க லிங்குசாமி முடிவு செய்ததுதான் என விஷால் குற்றம் சாட்டிய நிலையில் தற்போது அந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது.

லிங்குசாமி-அல்லு அர்ஜுன் இணையும் படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தை தமிழில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும், தெலுங்கில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை லிங்குசாமி சத்தமின்றி முடித்துவிட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அல்லு அர்ஜூன் தெலுங்கில் பெரிய நடிகராக இருந்தாலும் தமிழில் அவருக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை. அவர் நடித்த ஒரே தமிழ்ப் படமான ‘ருத்ரம்மாதேவி’ படமும் சரியாக போகவில்லை. இந்நிலையில் ‘ரஜினிமுருகன்’ வெற்றியால் இப்போதுதான் மீண்டு வந்துள்ள லிங்குசாமி மீண்டும் ரிஸ்க் எடுக்கவுள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *