shadow
lingaaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவேடங்களில் நடிக்கும் ‘லிங்கா’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராஸ் நிறுவனம் இந்த படத்தின் பாடல்களின் உரிமையை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தில் பாடல் வெளியீடு வரும் நவம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சத்யம் தியேட்டரில் பிரமாண்டமாக இந்த விழா நடக்கவிருப்பதாகவும், லிங்கா படத்தை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதியன்று ரிலீஸ் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய பொறுப்பாளர் பதவியை ஏற்ற ரஜினியின் இளையமகள் செளந்தர்யா அஸ்வின் முதன்முதலாக விஜய்யின் கத்தி படப்பாடல்களின் உரிமையை பெற்றார். தற்போது தனது தந்தை நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் உரிமையையும் பெற்றுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த் ஆகியோர்கள் இணைந்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகும் என ஈராஸ் நிறுவனம் கருதுகிறது.

ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, ஜெகபதி பாபு, சந்தானம், கருணாகரன், பிரம்மானந்தம், ராதாரவி, விஜயகுமார் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தில் கெளரவ வேடத்தில் பிரபு நடித்துள்ளார். ராக்லைன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு எந்திரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Leave a Reply