shadow

lingaaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படத்தின் டைட்டில் தமிழ் வார்த்தை இல்லை என்றும், அதனால் இந்த படத்திற்கு தமிழக அரசு கேளிக்கை வரிவிலக்கு அளித்தது செல்லாது என்றும் பொதுநல வழக்கு தொடுத்த மேட்டூரை சேர்ந்த அமிர்தராஜ் என்பவர் தனது மனுவை வாபஸ் செய்வதாக கூறியுள்ளதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த மாதம் அமிர்தராஜ் தாக்கல் செய்த மனுவில், “பொதுவாக தமிழில் தலைப்பு கொண்ட, தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கின்ற திரைப்படங்களுக்குத்தான் தமிழக அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும். ஆனால், ‘லிங்கா’ என்பது தமிழ் வார்த்தை அல்ல. அது சமஸ்கிருத வார்த்தை. எனவே, இந்த படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்ததை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்து நீதிபதிகள், பொதுநல வழக்கு தொடர்வதற்கு என்று சில வரையறை உள்ளது. வரி விலக்கு அளிப்பதை எல்லாம் எதிர்த்து பொதுநல வழக்கு தொடர முடியாது. வழக்கை வாபஸ் பெறுகிறீர்களா? இல்லை தள்ளுபடி செய்யட்டுமா?’ என்று கேட்டார். நீதிபதிகள் இவ்வாறு கூறியதை அடுத்து இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் வக்கீல் கூறியதை தொடர்ந்து, இந்த வழக்கு முடிவுக்கு வந்தது.

Leave a Reply