shadow

lingaaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படம் டிசம்பர் 12,13, மற்றும் 14ஆகிய மூன்று நாட்களில் உலகம் முழுவதும் சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. இதற்கு முன்னர் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் 12 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனை தற்போது தகர்க்கப்பட்டுள்ளது.

லிங்கா திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ.55 கோடி வசூல் செய்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் ரூ.2.7 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் ரூ.26 கோடியும், வெளிநாடுகளில் ரூ.21 கோடியும் வசூல் செய்து மொத்த வசூல் ரூ.100 கோடியை தாண்டிவிட்டது.

கடந்த வெள்ளி மாலை முதலே ‘லிங்கா’ படம் படுதோல்வியடைந்துவிட்டதாக ஒருசிலர் சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்பி வந்தனர். ஒருசில இணையதளங்களும் லிங்கா படம் படுசுமாராக இருப்பதாக விமர்சனம் செய்தது., ஆனால் நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து விமர்சனம் செய்தவர்களில் வாயை அடைத்துள்ளது லிங்காவின் வெற்றி.

Leave a Reply