shadow

lingaaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் நடித்துள்ள ‘லிங்கா’ திரைப்படம் நேற்று சென்சார் செய்யப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் யூ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். மேலும் படம் நன்றாக வந்திருப்பதாக படக்குழுவினர்களை சென்சார் அதிகாரிகள் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

‘லிங்கா’ திரைப்படம் சென்சார் செய்யப்பட்டுவிட்டதால் கண்டிப்பாக ரஜினியின் பிறந்தநாள் டிசம்பர் 12ஆம் தேதி வெளிவரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் ‘லிங்கா’ படம் 176 நிமிடங்கள் ஓடும் வகையில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கிட்டத்தட்ட 3 மணி நேரம் படம் இருப்பதால் ஒருசில காட்சிகளை குறைக்கலாமா? என்று படகுழுவினர் யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் பாடல்கள் ஏற்கனவே நல்ல ஹிட் ஆகியிருப்பது படத்திற்கு ஒரு பிளஸ் ஆகும். லிங்கா படத்தின் வியாபாரம் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் விறுவிறுப்பாக உலகம் முழுவதும் தியேட்டர்கள் புக் ஆகிக்கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply