shadow

linga1 கோச்சடையான் படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமான லிங்கா படத்தின் பூஜை இன்று காலை மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் நடைபெற்றது. பூஜையில் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பூஜையை அடுத்து படப்பிடிப்புகள் தொடங்கியது.

பட்டு வேஷ்டி, பட்டு சட்டையில் கம்பீரமாக தோற்றமளித்த ரஜினி, புத்துணர்ச்சியுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டதை படக்குழுவினர் ஆச்சர்யமாக பார்த்தனர். உடல்நிலை சரியான பிறகு ரஜினி மீண்டும் பழைய மிடுக்குடன் தென்படுவதாக கூறப்படுகிறது.

linga2இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, மற்றும் சோனாக்ஷி சின்ஹா நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கே.எஸ்.ரவிகுமார். பூஜையின் போது படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் அம்ப்ரீஷ், மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான சுமலதா ஆகியோர் பங்கேற்றனர்.

linga-pooja-stills-3

Leave a Reply