shadow

ஜல்லிக்கட்டு பாணியில் தயாராகும் நீட் அவசர சட்டம்

கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில் மாணவர்களின் எழுச்சி போராட்டம் காரணமாக அன்றைய முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் மத்திய அரசின் ஒத்துழைப்போடு அவசர சட்டம் இயற்றி அந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டார்.

இதே பாணியில் தான் தற்போது நீட் அவசர சட்டமும் தயாராகி வருகிறது. ஓராண்டு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் அவசர சட்டத்திற்கு ஏற்கனவே மத்திய அமைச்சகங்களான சுகாதாரம், மனிதவள மேம்பாடு மற்றும் சட்டத்துறைகள் ஒப்புதல் அளித்துவிட்டன. இந்த நிலையில் அடுத்தகட்டமாக உள்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

”ஜல்லிகட்டுக்குச் செய்ததை போல் குடியரசுத் தலைவர் சார்பில் எங்கள் அமைச்சகம் ஒப்புதல் அளித்துவிடும். இதற்கான சில சிறப்பு அதிகாரங்கள் எங்கள் அமைச்சகத்திற்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு விரைவாக மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு ஓர் அவசரச் சட்டத்தை தமிழகத்திற்கு இயற்றுவது இது இரண்டாவது முறை” என்று கூறினார். இரண்டு அவசர சட்டங்களுமே மாணவர்களின் வலியுறுத்தல் காணமாக இயற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply