shadow

பசுக்களை மட்டும் பாதுகாத்தால் போதுமா? விவசாயிகளையும் காப்பாற்றுங்கள் சிவசேனா எம்பி

தமிழக விவசாயிகள் கடந்த 20 நாட்களாக தலைநகர் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து வெளிவரவில்லை

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு வங்கிகள் வழங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு விவசாயிகளுக்கு ஓரளவுக்கு நிம்மதியை தந்தாலும் தேசிய வங்கிகளும் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவுத் விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘பசுக்களை கொல்பவர்களுக்கு தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் பட்சத்தில் விவசாயிகளை தற்கொலைக்கு ஆழ்த்தும் மாநில அரசுகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

பசுக்களை பாதுகாப்பு போல், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் அந்த மாநிலம் சட்டத்திற்கு புறம்காக செயல்படுகிறது என்று தானே அர்த்தம்.

பசுவதைக்கு எதிராக நாடும் முழுவதும் சட்டம் இயற்றப்பட வேண்டும். பசுக்களை பராமரிக்கும் பொறுப்பை அரசே ஏற்று நடத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் மாட்டிறைச்சி ஏற்றுமதி கணிசமான அளவில் உயர்ந்துவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply