shadow

lic

வீடு கட்டுவதற்கும், விரிவாக்கம் செய்வதற்கும், வீட்டைப் பழுது பார்க்கவும், புதுப்பிக்கவும்கூட வீட்டுக் கடன்கள் வழங்கப் படுகின்றன. மனை வாங்குவதற்கும்கூடக் கடன் கிடைக்கும்.

வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்று திட்டமிடும்போது வீட்டுக் கடனுக்கும் அச்சாரம் போட்டுவிடுவோம். பெரும்பாலும் வீட்டுக் கடன் என்றால், வங்கிகளைத்தான் பலரும் நாடுவார்கள். வீட்டு வசதி நிதி நிறுவனங்களும் இன்று நிறைய வந்துவிட்டன.

போட்டி போட்டுக் கொண்டு இந்த நிறுவனங்கள் வீட்டுக் கடனை வழங்குகின்றன. இந்த வகையில் எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமும் வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், எல்.ஐ.சி. காப்பீட்டுக் கழகத்தின் துணை நிறுவனம்.

எல்.ஐ.சி. வீட்டுக் கடன் என்பதால் பலரும், அதில் காப்பீடு எடுத்து பிரீமியம் செலுத்தி வருபவர்களுக்கே தரப்படும் என்று நினைக்கிறார்கள். பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகளில் வீட்டுக் கடன்களை எப்படி யார் வேண்டுமானாலும் பெறுகிறார்களோ, அதேபோல யார் வேண்டுமானாலும் பெறலாம்.

வழக்கம்போல் கேட்கப்படும் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் அடிப்படையில் கடன்கள் வழங்கப்படுகின்றன. எல்.ஐ.சி. வீட்டுக் கடனில் என்னென்ன கடன்கள் வாங்கலாம் என்பதைப் பார்ப்போமா?

வீடு வாங்க

தனியாக வீடோ அல்லது அடுக்குமாடியில் ஒரு வீடோ வாங்கக் கடன் வழங்கப்படுகிறது. சொத்தின் மதிப்பு, முத்திரைக் கட்டணம், பதிவுக் கட்டணம் எல்லாம் சேர்த்து ஆகும் செலவில் 80 முதல் 85 சதவீதம் தொகை இதில் தரப்படும்.

கடனை மாதத் தவணை முறையில் (இ.எம்.ஐ.) செலுத்தலாம். மாதச் சம்பளக்காரர்கள் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரையிலும், சுயதொழில் புரிபவர்கள் 20 ஆண்டுகள் வரையிலும் இ.எம்.ஐ.-யைத் திரும்பச் செலுத்த வசதியுண்டு.

பிற கடன்கள்

வீடு கட்டுவதற்கும், விரிவாக்கம் செய்வதற்கும், வீட்டைப் பழுது பார்க்கவும், புதுப்பிக்கவும்கூட வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன. மனை வாங்குவதற்கும்கூடக் கடன் கிடைக்கும். ஆனால் அந்த மனை டி.டி.சி.பி. அல்லது சி.எம்.டி.ஏ. அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தக் கடன்களுக்கும் சொத்தின் மதிப்பு, முத்திரைக் கட்டணம், பதிவுக் கட்டணம் சேர்த்து ஆகும் செலவில் 80 முதல் 85 சதவீதம் கடன் தொகை வழங்கப்படுகிறது. இந்தக் கடன் வகைகளுக்கும் மாதச் சம்பளக்காரர்கள் 30 ஆண்டுகள் வரையிலும், சுயதொழில் செய்பவர்கள் 20 ஆண்டுகள் வரையிலும் கடனைத் திரும்பச் செலுத்த கால அவகாசம் உண்டு. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் வங்கிகளில் வசூலிப்பதைப் போலவே இதிலும் வழங்கப்படுகிறது.

வீடு கட்டுவதற்கும், விரிவாக்கம் செய்வதற்கும், வீட்டைப் பழுது பார்க்கவும், புதுப்பிக்கவும்கூட வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன. மனை வாங்குவதற்கும்கூடக் கடன் கிடைக்கும். ஆனால் அந்த மனை டி.டி.சி.பி. அல்லது சி.எம்.டி.ஏ. அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். இந்தக் கடன்களுக்கும் சொத்தின் மதிப்பு, முத்திரைக் கட்டணம், பதிவுக் கட்டணம் சேர்த்து ஆகும் செலவில் 80 முதல் 85 சதவீதம் கடன் தொகை வழங்கப்படுகிறது.

இந்தக் கடன் வகைகளுக்கும் மாதச் சம்பளக்காரர்கள் 30 ஆண்டுகள் வரையிலும், சுயதொழில் செய்பவர்கள் 20 ஆண்டுகள் வரையிலும் கடனைத் திரும்பச் செலுத்த கால அவகாசம் உண்டு. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் வங்கிகளில் வசூலிப்பதைப் போலவே இதிலும் வழங்கப்படுகிறது.

ஆவணங்கள்

வழக்கமாக வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கப் பின்பற்றப்படும் நடைமுறைகளே எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்திலும் பின்பற்றப்படுகின்றன. ஆறு மாதச் சம்பளச் சான்றிதழ், வங்கி பரிவர்த்தனை அறிக்கை (Bank Statement), கடைசியாகச் செலுத்திய 3 ஆண்டுகால வருமான வரிச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

மேலும் கேட்கப்படும் ஆவணங்களை முறையாகக் கொடுப்பதன் மூலம் கடனைப் பெறலாம். எல்.ஐ.சி-யில் காப்பீடு எடுத்து பிரீமியம் செலுத்திவந்தால், அதை உத்திரவாதமாகவும் காட்டலாம்.

Leave a Reply