shadow

seeds_2716994h

கீரை மட்டுமில்லை, அதன் சத்து நிறைந்த விதையையும் சமைத்துச் சாப்பிட முடியும்.

அமரந்த் என்று கூறப்படும் கீரை விதையை தானியம் என்று கூற முடியாது. அதேநேரம் சத்து மிகுந்தது என்பதில் சந்தேகமில்லை. தண்டுக்கீரையின் விதைதான் அமரந்த். கீரை இளசாக இருக்கும்போது பறித்தால் முளைக்கீரை, முற்றிய பின் தண்டுக்கீரை.

கோதுமை, மைதாவில் காணப்படும் குளூட்டன் இந்தக் கீரை விதையில் கிடையாது. அதனால் குளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் கீரை விதையை அதிகமாக உட்கொள்ளலாம். மாவாக அரைத்துக் கோதுமை மாவுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

கீரை விதையில் புரதச் சத்து அதிகம். 100 கிராமில் 13 சதவீதம் புரதச் சத்து நிரம்பியிருக்கிறது. அதாவது ஒரு கோப்பை கீரை விதையில் 26 கிராம் புரதச்சத்து மட்டுமே.

அது மட்டுமில்லை சுண்ணாம்புச் சத்து, மக்னீசியம், பொட்டாஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவையும் இதில் நிறைய உள்ளன.

கீரை விதையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் தன்மை, இதற்கு உள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனவே, இதயத்துக்கும் இது நல்லது.

Leave a Reply