shadow

பறிமுதல் செய்த கப்பல் எங்களுக்கு தேவையில்லை. சீனாவே வைத்து கொள்ளட்டும். டிரம்ப் அதிரடி

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USNS Bowditch’ என்ற போர்க்கப்பல் பிலிப்பைன்ஸ் நாட்டை ஒட்டியுள்ள கடற்பகுதியில் தண்ணீருக்கு அடியில் ஆளில்லா தேடும் விமானம் மூலமாக சில ஆய்வுகளை செய்தது. இந்த கப்பலை சுற்றி வளைத்து  சீனக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதலுக்கு பின்னர் கப்பல்களின் பாதுகாப்பு கருதியே அமெரிக்காவின் நீர் மூழ்கி கப்பலை பறிமுதல் செய்ததாகவும், அமெரிக்கா கேட்டுக்கொண்டால் தகுந்த விளக்கத்திற்கு பின்னர் அந்த கப்பலை திருப்பி தருவதாகவும் சீனா அறிவித்தது.

ஆனால் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், ‘தென்சீனக் கடல் பகுதியில் பறிமுதல் செய்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பலை சீனாவே வைத்துக் கொள்ளட்டும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். சீனா தங்கள் நாட்டு கப்பலை திருடிவிட்டதாகவும், அவ்வாறு திருடப்பட்ட கப்பல் எங்களுக்கு வேண்டாம். அதனை அவர்களே வைத்துக் கொள்ளட்டும்’ என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply