டைட்டானிக் நாயகனுக்கு 2016-ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருது
oscars
கடந்த 1997ஆம் ஆண்டு வெளிவந்த ‘டைட்டானிக்’ படத்தில் ஹீரோவாக மிக அபாரமாக நடித்த நடிகர் Leonardo DiCaprio நடித்த The Revenant என்றா திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பாக நடித்த நடிகர் Leonardo DiCaprio அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.

88வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று நடைபெற்று வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்கு மொத்தம் ஐந்துபேர் கடும் போட்டியில் இருந்த நிலையில் Leonardo DiCaprio இந்த விருதை வென்றுள்ளார். பிரபல அமெரிக்க-பிரிட்டிஷ் நடிகை Julianne Moore இந்த விருதை Leonardo DiCaprio அவர்களுக்கு பெருத்த கரகோஷங்களுக்கு இடையே வழங்கினார்.

41 வயதான Leonardo DiCaprio கடந்த 1991முதல் நடித்து வந்தாலும், 1997ஆம் ஆன்டு வெளிவந்த டைட்டானிக் படம் மூலம் உலகப்புகழ் பெற்றார்.

Chennai Today News: Leonardo DiCaprio Wins the 2016 Oscar for Best Actor for The Revenant

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *