shadow

சமாதிக்கு சென்றால் பதவி இழப்பு. பழிதீர்க்கின்றதா ஜெயலலிதா ஆவி?

எதற்கு எடுத்தாலும் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தியானம் செய்வது என்ற பழக்கத்தை கடைபிடித்து வரும் அரசியல்வாதிகள் இனி அவருடைய சமாதிக்கு செல்வார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு காரணம் செண்டிமெண்ட்தான்

ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றால் ஏதாவது ஒன்றை இழக்க நேரிடும் என்ற ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவிவருகிறது. ஓபிஎஸ் அவர்கள் ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் செய்த பின்னர் முதல்வர் பதவியை இழந்தார்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுகவினரால் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஆவணத்தை, ஜெயலலிதா சமாதியில் வைத்து வணங்கினார். ஆனால் அவருக்கு முதல்வர் பதவிக்கு பதிலாக கிடைத்தது பெங்களூர் சிறைதான்.

டிடிவி தினகரன் ஜெயலலிதா சமாதி சென்று வணங்கிய பின் அதிமுகவின் சின்னம் இரட்டை இலை மற்றும் கட்சியின் பெயர் ஆகிய இரண்டையும் இழந்தார்.

இவ்வாறு ஜெயலலிதாவின் சமாதியை வணங்கிய ஒவ்வொருவரும், எதாவது ஒன்றை இழந்த வண்ணம் உள்ளதால் தனக்கு துரோகம் செய்தவர்களை ஜெயலலிதா ஆத்மா படிப்படியாக பழி தீர்த்து வருவதாக, சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply