பூரண மதுவிலக்கை தமிழகம் முழுவதும் அமல்படுத்த கோரி மதுரை சட்டக்கல்லூரி மாணவி தனது குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்து வருவதால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மதுரையை சேர்ந்த 18 வயது மாணவி நந்தினி, சட்டக்கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் தனது தங்கை நிரஞ்சனி, தந்தை ஆனந்தன் ஆகியோர்களுடன் பூரண மதுவிலக்கு தமிழகத்தில் நடைமுறை படுத்த கோரி வைகை ஆற்றில் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். இதனால் மாணவர்களது இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையிலும் இவர்கள் மூன்று பேரும் உண்ணவிரதத்தை தொடர்வதால் மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மாணவர்களிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

உண்ணாவிரதம் இருக்கும் மாணவி நந்தினியை காண மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையின் முன்பு குவிந்துள்ளனர். ஆனால் போலீஸார் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் நந்தினிக்கு ஆதரவு தெரிவித்து நூற்றுக்கணக்கான மதுரை சட்டக்கல்லூரி   மாணவர்கள் விஜிகுமார் தலைமையில் நேற்று திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்த செய்தியறிந்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள ஆலோசனை செய்துவருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *