சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு

அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் கல்லூரி மாணவர், மாணவிகள் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலையில் சென்னை நியூ காலேஜ் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர். குறிப்பாக சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் பாரிமுனை பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

போலீஸ் தடுப்பையும் மீறி மாணவர்கள் சாலையின் குறுக்கே நின்று கொண்டு போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *