shadow

twins dead 1 இங்கிலாந்தில் உள்ள ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காததால் அவருடைய இரட்டை பெண் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள பர்மிங்காம் என்ற பகுதியில் வாழ்ந்து வரும் 27 வயது இளம்பெண் ஜோஸ்லின் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். சமீபத்தில் அவருக்கு திடீரென எதிர்பாராத விதமாக பிரசவ வலி ஏற்பட்டதால் உடனடியாக  ஆம்புலன்ஸை போன் மூலம் அழைத்துள்ளார். ஜோஸ்லின் மருத்துவ உதவிக்காக அழைத்து 12 நிமிடங்களில் மருத்துவர்கள் விரைந்து வந்துவிட்டனர். ஆனால் ஜோஸ்லின் உள்ளே மயக்கமாக இருந்ததால் மருத்துவர்கள் காலிங் பெல்லை அழுத்தியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் உடனடியாக காவல் துறையினரின் உதவியை நாடிய மருத்துவர்கள் 30 நிமிடங்கள் கழித்தே காவல்துறையினர்களின் உதவியுடன் ஜோஸ்லினின் வீட்டிற்குள் நுழைந்தனர்.

twinsவீட்டின் உள்ளே இதய துடிப்பு நின்றிருந்த நிலையில் ஜோஸ்லின் தரையில் விழுந்துகிடந்திருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மருத்துவ உதவியாளர்கள், அறுவை சிகிச்சை மூலம் இரண்டு பெண் குழந்தைகளையும் வெளியேற்றினர். ஆனால், குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, பரிதாபமாக குழந்தைகள் இறந்தே பிறந்தன. இதனால் ஜோஸ்லின் குடுமத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கினர்.

இந்த சம்பவம் குறித்து தெரிவித்த ஜோஸ்லினின் தந்தை, ‘என் மகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்திருந்தால், நான் எனது இரண்டு பேத்திகளை இழந்திருக்க மாட்டேன். எனது மகள் இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவசர காலங்களில் மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என கூறினார்.

Leave a Reply