தங்கப்பத்திரம் வாங்க நாளை கடைசி தினம். இந்தியன் வங்கி அறிவிப்பு

இந்தியன் வங்கியில் தங்கத்தை பத்திரங்களாக வாங்கும் திட்டத்திற்கு நாளை அதாவது ஏப்ரல் 28 கடைசி தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தை பத்திரங்களாக வாங்கும் திட்டம் குறித்து இந்தியன் வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் எம்.கார்த்திகேயன் கூறியதாவது: தங்கத்தை பத்திரங்களாக வாங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது. இந்த திட்டத்தில் இணைவதற்கான வாய்ப்பு கடந்த 24ம் தேதி முதல் நாளை வரை (28-04-17) பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருவர் குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்கம் முதல் 500 கிராம் தங்கம் வரை பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம்.

தங்கத்தின் தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.29901 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சேர்பவர்களுக்கு வரும் 12ம் தேதி பத்திரங்கள் வழங்கப்படும். இந்த பத்திரம் 8 ஆண்டுகள் வரை செல்லக்கூடியதாகும். அதற்கு முன்பாகவே அதை முடித்துகொள்ளலாம். பத்திரத்தை முடிக்கும் போது அப்போதை விலைப்படி தங்கத்துக்கான பணம் கொடுக்கப்படும்.

தங்கத்தை வீடுகளில் வைக்கும் போது திருட்டு போக வாய்ப்புண்டு. பேங்க் லாக்கரில் வைக்கும் போது அதற்கான கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது போன்ற காரணங்களால் தங்கத்தை பத்திரமாக வாங்கிவைத்துக் கொண்டால் எந்த பிரச்சனையும் இருக்காது. வாடிக்கையாளர்களுக்கு வருடத்திற்கு 2.50 சதவீதம் வட்டி தொகையும் வழங்கப்படும்.

எப்போதெல்லாம் தங்கத்தில் விலை உயர்கிறதோ அப்போதெல்லாம் வட்டி தொகையும் உயரும். தங்கத்தை வைத்து செய்யும் வர்த்தகங்களுக்கும் அந்த பத்திரத்தை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் இணைய விரும்பினால், அனைத்து இந்தியன் வங்கிக் கிளைகளிலும் இதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *