அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் டாம் பிராட்லி  சர்வதேச டெர்மினலில் இரவு 8.30 மணிக்கு இந்த குண்டு வெடித்தது. விமான ஊழியர்கள் பயன்படுத்தும் கழிவறையில் பிளாஸ்டிக் பாட்டிலில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது. பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததும் வெண்புகை பரவியது. குண்டுவெடிப்பால் விமானங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 4 விமானங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டன.

வெடிகுண்டு நிபுணர்களும் லாஸ் ஏஞ்செல்ஸ் போலீசாரும் விமான நிலையத்தில் சோதனையிட்டனர். ட்ரை ஐஸ்சை சாதாரண வெப்பநிலையில் வைக்கும்போது, வாயுவாக மாறும். அப்போது வெண்புகையை உருவாக்கும். ஒரு பாட்டிலில் தண்ணீர், ட்ரை ஐஸை போட்டு மூடி வைத்தால், 30 வினாடியில் இருந்து 30 நிமிடங்களில் வெடிக்க வைக்க முடியும். வெடிக்கும்போது பலத்த சத்தத்தை ஏற்படுத்தும். இது தீவிரவாத செயலாக இருக்க வாய்ப்பில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply