shadow

 mulayamsingh grandsonசமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகிய இருவரும் விரைவில் சம்மந்தியாக போகின்றனர். ஆம் லாலுவின் மகளை, முலாயம்சிங்கின் பேரன் திருமணம் செய்யவுள்ளார்.

முலாயம்சிங்கின் இளைய பேரன் தேஜ் பிரதாப் சிங் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மக்களவை இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முதலாக அரசியலில் அடியெடுத்து வைத்தார். தற்போது இவருக்கு திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். லாலு பிரசாத் யாதவ்வின் மகள் ராஜலட்சுமியை தேஜ் பிரதாப் சிங்கிற்கு மணமுடிக்க இருவீட்டாரும் தற்போது முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து முலாயம்சிங்கின் உறவினர்கள் கூறும்போது, ‘தனது மூத்த மகள் மிசா பாரதியை, முலாயம்சிங்கின் மகன் அகிலேஷ் சிங்கிற்கு மணமுடிக்க வாலு விரும்பினார். அது முடியவில்லை. தற்போது, இளையமகள் ராஜ லட்சுமியை, தேஜ் பிரதாப்புக்கு மணமுடிக்கவுள்ளார். இவர்களது திருமணம், 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெறூம் எனத் தெரிவித்தனர்.

லாலுவுக்கு ஆறு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். ஐந்து பெண்களுக்கு திருமணமாகிவிட்டது. ராஜலஷ்மி 6-வது மகளாவார். தனது ஐந்தாவது மகளான அனுஷ்காவை ஹரியாணாவின் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவரான விஜய்சிங் யாதவின் மகன் சிரஞ்சீவி ராவுக்கு கடந்த 2012-ல் மணம் செய்து வைத்திருந்தார் லாலு. முலாயம்சிங்கின் புதிய உறவால், பிஹாரில் லாலுவுக்கு அரசியல் லாபம் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.

Leave a Reply