முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் பீகார் மாநில முதல்வரும், முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அவர்களுக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் தொடர்ந்து நடந்து வருகிறாது.
பீகார்  மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில்  அவரது உடல் நிலையை காரணம் காட்டி தற்போது அவருக்கு 6 வார காலம் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து அவா் வீட்டில் இருந்தபடி மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார்
இந்த நிலையில் நேற்று அவருக்கு ஏற்பட்ட திடீா் நெஞ்சுவலி மற்றும் ரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபின் அளவு குறைந்ததை அடுத்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *