shadow

இளையமகன் – துணை முதல்வர், மூத்த மகன் – அமைச்சர், மனைவி-மேலவை தலைவர். லாலு குடும்பத்தின் ஆக்கிரமிப்பு

laluசமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதீஷ்குமார்-லாலு பிரசாத் யாதவ் மெகா கூட்டணி வெற்றி பெற்று நிதீஷ்குமார் முதல்வராகவும், லாலுவின் இளையமகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ள நிலையில் தற்போது லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் சட்டப்பேரவை தலைவராகவும் தேஜஸ்வி யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளதால், லாலுவின் அரசியல் வாரீசு இவர்தான் என மறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பீகாரில் நடைபெறு ஆட்சியில் துணை முதல்வராக லாலுவின் இளையமகன் தேஜஸ்வியும் அமைச்சராக மூத்த மகன் தேஜ் பிரதாப்பும் பதவி வகித்து வரும் நிலையில் இளைய மகன் தேஜஸ்வி தான் லாலுவின் அரசியல் வாரிசு என்பதை உறுதி செய்யும் வகையில் கட்சியின் சட்டப்பேரவை தலைவராக இளைய மகன் தேஜஸ்வியை, லாலு நேற்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் சட்டமேலவை தலைவராக லாலுவின் மனைவி ராப்ரி தேவியை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

லாலுவின் குடும்பத்தினர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது குறித்து கருத்து கூறிய பீகார் மாநிலத்தின் பாஜக சட்டப்பேரவை தலைவர் பிரேம்குமார் கூறும்போது, ‘பிஹாரில் கடந்த 15 ஆண்டுகளாக லாலு வாரிசு அரசியல் நடத்தி வந்ததை இந்த தேசமே கவனித்தது. தற்போது மீண்டும் அதே அரசியலை அவர் கையில் எடுத்துள்ளார். அவருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை’ என்று கூறியுள்ளார்.

English Summary ; #Lalu makes younger son Tejaswi leader of RJD in d Assembly.#Rabri Devi 2 b leader of party in d Council. Scam fame Yadavs now rule in Bihar

Leave a Reply