shadow

லால் பகதூர் சாஸ்திரி எப்படி இறந்தார். மகன் அனில் சாஸ்திரியின் திடுக்கிடும் தகவல்
lalbahadur
பண்டித ஜவஹர்லால் நேருக்கு பின்னர் பாரத பிரதமராக பதவியேற்ற லால் பகதூர் சாஸ்திரி ரஷ்ய சுற்றுப்பயணம் செய்தபோது திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அவரது மகன் கூறும் திடுக்கிடும் தகவலால்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நேதாஜியின் ரகசிய ஆவணங்களை மேற்குவங்க அரசு வெளியிட்டதுபோல் தனது தந்தையின் மரணத்தின் மர்மங்கள் குறித்த ஆவணங்களையும் மத்திய அரசு வெளியிட்டு உண்மையை நாட்டிற்கு தெரியப்படுத்தவேண்டும் என்று லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கையை தான் காங்கிரஸ் ஆட்சியின்போது பலமுறை விடுத்ததாகவும், ஆனால் காங்கிரஸ் தனது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றும், எனவேதான் பாஜக அரசிடம் கோரிக்கை வைப்பதாக அவர் கூறியுள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு, 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதை அடுத்து இந்திய பிரதமராக லால்பகதூர் சாஸ்திரி பதவி ஏற்றார். பிரதமர் பதவியில் அவர் அமர்ந்து 2 ஆண்டுகள் முடிவடைதற்கு முன்பாகவே, முன்னாள் சோவியத் ரஷ்யாவின் தாஷ்கண்ட்டில் மரணமடைந்தார். தாஷ்கண்ட்டில் அப்போது நடந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள சாஸ்திரி சென்று இருந்தார்.

அவரின் மரணத்தால் இந்தியாவில்  கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. பாகிஸ்தானுடனான பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க,  அப்போதைய சோவியத் ரஷ்யா விடுத்த அழைப்பின்பேரில் சாஸ்திரி தாஷ்கண்ட் சென்று இருந்தார். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, ரஷ்யாவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், இறந்த பிறகு அவரின் உடல் நீல நிறத்தில் இருந்ததது என்றும் கூறியுள்ள அவரின் மகன் அனில் சாஸ்திரி, இது தொடர்பான உண்மைத் தகவல்களை மத்திய அரசு வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து, சாஸ்திரியின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டுவருவதற்கான உரிய ஆவணங்களை பாஜக அரசு  வெளியிடவேண்டும் என்று அவரின் மகன் அனில் சாஸ்திரி கோரிக்கை விடுத்திருகின்றார். இந்த கோரிக்கையால் காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply