shadow

Poovarasankuppam-Lakshmi-Narasimhar-swathi-homam

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆடி மாத சிறப்பு ஸ்வாதி ஹோமத்தில் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலி  த்தார். விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆடி மாத சிறப்பு சுவாதி ஹோமம் நேற்று நடந்தது. காலை 6:00 மணி முதல்   7:00 மணி வரை மூலவருக்கு அபிஷேகம், ௮:00 மணிக்கு மூலவருக்கு தங்கக் கவசம் சாற்றுதல், தீபாராதனை நடந்தது. காலை 11:30 மணிக்கு தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், நரசிம்ம ஹோமம், 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 12:40 மணிக்கு கலசம் புறப்பாடு, மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு கும்ப தீர்த்தத்தால் அபிஷேகம், மதியம் 1:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. மூலவர் லட்சுமி நரசிம்மர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு அமிர்தவள்ளி தாயார் புறப்பாடு நடந்தது.   ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் முத்துலட்சுமி, பட்டாச்சாரியார் பார்த்தசாரதி செய்திருந்தனர்.

Leave a Reply