shadow

முதன்முதலாக பேய் வேடத்தில் லட்சுமி மேனன்

lakshmi-menonபாவாடை தாவணியில் கிராமத்து கேரக்டர்களில் பெருமபாலான படங்களில் நடித்து வரும் நடிகை லட்சுமி மேனன், முதன்முதலாக ஒரு பேய்ப்படத்தில் அதுவும் பேயாக நடித்து வருகிறார். சூர்யா போன்ற பிரபல நடிகர்களும், நயன்தாரா போன்ற பிரபல நடிகைகளும் பேயாக நடித்துள்ள நிலையில் தற்போது லட்சுமி மேனனையும் பேய்பிடித்துவிட்டது.

முதன்முதலாக பேய் வேடத்தில் லட்சுமி மேனன் நடிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கவுள்ளார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தை சக்தி சவுந்தரராஜன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சிபிராஜ் நடித்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேய் வேடத்தில் நடிக்கும் லட்சுமி மேனனுக்கு பேய் மேக்கப் போட மும்பையில் இருந்து ஸ்பெஷல் மேக்கப்மேன்கள் வரவழைக்கப்படுவதாகவும், பேய் வேடத்தில் நடிப்பது புதுமையான அனுபவமாக இருந்ததாகவும் லட்சுமி மேனன் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத் மகளாக நடித்த அகிலாவும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

Leave a Reply