shadow

லட்சுமி கடாட்சம் பெற என்ன செய்ய வேண்டும்?

lakshmiசெல்வத்தின் அதிபதியாம் மகா லட்சுமியை வழிபடுவதன் மூலமும் சுக்ர பகவானின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற முடியும்.

அவ்வகையில் ஸ்ரீசூக்தம், லட்சுமி பஞ்சகம், கனகதாரா ஸ்தோத்திரம் முதலான துதிநூல்களைப் பாராயணம் செய்து, திருமகளை ஆராதிக்கலாம். தமிழில், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய திருமகள் அந்தாதி எனும் நூல் உன்னதமானது. ‘திருமகளே’ எனத் துவங்கி ‘திருமகளே’ என்றே முடியும் அந்த நூலில் 103 பாடல்கள் உண்டு. அவற்றில் கீழ்க்காணும் பாடலைப் பாடி வழிபடுவதால், நம் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நீங்காது இருக்கும்.

திருமகளே திருப்பாற்கடல்
ஊடன்று தேவர்தொழ
வருமகளே உலகெல்லாமும்
என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே
உற்று உரம் பெரிது
தருமகளே தமியேன் தலைமீது
நின்தாள் வையே

(திருமகள் அந்தாதி)

Leave a Reply