shadow

சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் குறித்து குவைத் அறிவித்த முக்கிய அறிவிப்பு

குவைத் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று குவைத் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குவைத் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க அந்நாட்டு அரசு முன்வந்துள்ளதன் மூலம் அங்கு காலம் கடந்து தங்கியிருப்பவர்கள் லதங்கள் பெயரை சம்பந்தப்பட்ட தூதரக அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பதிவு செய்தால், உடனே சொந்த நாட்டிற்கு திரும்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர்களுக்கு எந்தவித அபராதமோ, தண்டனையோ அளிக்கப்படாமல் மன்னிப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்திய தூதரகம் உள்பட குவைத் நாட்டில் உள்ள அனைத்து நாட்டின் தூதரகங்களிலும் ஏராளமானோர் குவிந்தனர். முன்னதாக கடந்த ஜனவரி 29ஆம் தேதி உடன், தூதரக பதிவிற்கான காலக்கெடு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 22 என நீட்டிக்கப்பட்டு, தொடர்ந்து ஏப்ரல் 22 என நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடியிருப்பு விதிமீறல் பிரச்சனைகள் காரணமாக, நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் குடியிருப்பு விவகாரத்துறையை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக, வளைகுடா நாடுகள் வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்துவதை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

Leave a Reply