shadow

kuttithalaஅஜீத் படம் வெளிவந்தபோதும் சரி, வெளிவராதபோதும் சரி அவரை பற்றிய செய்திகள் ஏதாவது வந்து கொண்டேதான் இருக்கின்றன. என்னை அறிந்தால் படம் ரிலீஸாகி இரண்டு மாதங்கள் ஆகியபோதிலும் இன்னும் அவர் தனது அடுத்த படம் குறித்து எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும் குட்டிதல மற்றும் அஜீத் ஆபரேஷன் குறித்த செய்திகள் வெளியாகி டுவிட்டர் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பிறந்த குட்டித்தல’க்கு பெயர் சூட்டும் விழாவை விரைவில் தனது வீட்டில் அஜீத் வைக்கவுள்ளதாகவும், இந்த விழாவுக்கு விஜய் உள்பட அஜீத்தின் திரையுலக நண்பர்கள் பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் டுவிட்டரில் செய்திகள் வெளியாகியுள்ளது.

அஜீத்துக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சைனஸ் ஆபரேஷன் நடந்தது தெரிந்ததே. எனவே டாக்டரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு அஜீத் ‘குட்டித்தல’ பெயர் சூட்டும் விழாவின் தேதியை அறிவிக்க உள்ளதாக டுவிட்டர் செய்திகள் கூறுகின்றன. அஜீத் தனது குழந்தைக்கு என்ன பெயரை முடிவு செய்து வைத்துள்ளார் என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும். அதன்பின்னர் வழக்கம் போல டுவிட்டரில் மீண்டும் டிரெண்டை ஏற்படுத்த அவரது ரசிகர்கள் தயாராகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *