shadow

குட்டித்தல’க்கு திடீரென கிடைத்த உலகளாவிய டிரெண்ட்

kuttithalaதல அஜித்துக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்த போது அவரது ரசிகர்கள் ‘குட்டித்தல’ என்று கொண்டாடி மகிழ்ந்தனர். ஆத்விக் என்று அஜித் தனது அன்பு மகனுக்கு பெயர் வைத்த போதிலும் ரசிகர்களுக்கு அவர் என்றுமே குட்டித்தல தான்

இந்நிலையில் இன்று குட்டிதல தனது தாய் ஷாலினியின் மடியில் உட்கார்ந்திருக்கும் புதிய புகைப்படம் ஒன்று டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை லட்சக்கணக்கான அஜித் ரசிகர்கள் ஷேர் செய்தும், லைக் செய்தும் வந்ததால் ஒருசில மணி நேரத்தில் குட்டித்தல உலக அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகிவிட்டார்.

Leave a Reply