shadow

‘குட்டிப்புலி’ முத்தையாவுடன் மீண்டும் சசிகுமார்

சசிகுமார், லட்சுமிமேனன் நடித்த ‘குட்டிப்புலி’ படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா அதன்பின்னர் ‘கொம்பன்’ மற்றும் ‘மருது’ ஆகிய வெற்றி படங்களை இயக்கினார். அடுத்ததாக அவர் சூர்யாவின் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்பட்டபோது, திடீரென சூர்யா, விக்னேஷ் சிவனின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிக்க சென்றுவிட்டார்

இந்நிலையில் இயக்குனர் முத்தையா தற்போது மீண்டும் சசிகுமார் நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு இயக்குனர் முத்தையா ‘கொடிவீரன்’ என்ற டைட்டிலை வைத்துள்ளதாகவும், சிவகெங்கை அருகே உள்ள கிராமத்தின் பின்னணியில் இந்த படம் வரும் மார்ச் முதல் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply