shadow

குஷ்புவிடம் திருநாவுக்கரசர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். பொன்.ராதாகிருஷ்ணன்

kushbooமத்திய அரசு கொண்டு வரவுள்ள பொதுசிவில் சட்டத்துக்கு காங்கிரஸ் உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த சட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பாக திருநாவுக்கரசர் குஷ்புவிடம் பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து கூறிய திருநாவுக்கரசர், ‘பொதுசிவில் சட்டத்தை குஷ்பு ஆதரித்துள்ளது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அது காங்கிரஸ் கட்சியின் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவராக பதவியேற்றதில் இருந்தே குஷ்புவுக்கும் திருநாவுக்கரசருக்கும் பனிப்போர் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது பொதுசிவில் சட்டத்தைல் இருவருக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply