மீனா, கீர்த்திசுரேஷை அடுத்து குஷ்பு! என்ன நடக்குது ‘தலைவர் 168’ படத்தில்?

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான யதலைவர் 168ய படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை மீனா நடிக்க உள்ளார் என்ற செய்தியை சற்று முன்னர் பார்த்தோம்

இந்த செய்தியின் பரபரப்பு அடங்குவதற்கு உள்ளேயே மீண்டும் ஒரு முக்கிய செய்தியாக இந்த படத்தில் நடிகை குஷ்புவறர இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா, குஷ்பு ஆகிய இருவரும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

இந்நிலையில் ரஜினியின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும், பிரகாஷ்ராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும், காமெடி வேடத்தில் சூரி நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

சிறுத்தை சிவா இயக்கத்தில் டி இமான் இசையில் உருவாகவிருக்கும் இந்த படம் இம்மாதம் இறுதியில் பூஜையுடன் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply