நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணுஉலையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் ஜுலை மாதம் 13ம் தேதி செயல்பட தொடங்கியது. முதலில் அணவலை ரியாக்டரின் வெப்பநிலை உயர்த்தும் பணி தொடங்கியது. அப்போது அணுஉலையின் செயல்பாடு பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  அந்த வெப்பநிலையில் அணு உலையின் நிலைப்பற்றி இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து மின் உற்பத்தியை தொடங்க அனுமதி அளித்தனர்.
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முதல் அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கிவிடும் என்று அறிவிக்கபட்டு இருந்தது. ஆனால் மின் உற்பத்தியை தொடங்க கால தாமதம் ஏற்பட்டு வந்தது.  இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் சுற்றுபயணமாக ரஷ்யா சென்றார். அங்கு ரஷ்யா அதிபர் விளாடிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது அவர் இன்னும் சில மணி நேரங்களில் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தி தொடங்கும் என அறிவித்தார். இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பு மையத்தில் அனுப்பி முதல் கட்டமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply