shadow
7980299339_8c2314b8ae_z
மெல்ல மெல்ல கோயில் பிரஹாரங்களில் கருங்கல் தரையை மறைத்து அதன் மேல் சிமெண்ட் தரையைப் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.இதைச் செய்வது அறநிலையத் துறையா அல்லது மக்களுக்கு நல்லது செய்வதாக நினைக்கும் அமைப்புக்களோ, தனிநபர்களோவா தெரியாது.ஆனால் இது முட்டாள்தனம்.ஆயிரம் ரூபாய் கொடுத்து அக்யூபிரஷர் செருப்பு வாங்குவதை விட, சில நூறு ரூபாய்கள் கொடுத்து அக்யூபிரஷர் உபகரணங்கள் வாங்குவதை விட, டோக்கன் வாங்கிக் கொண்டு அக்யூபிரஷர் தெரப்பிஸ்ட்டுகளைப் பார்க்க காத்திருப்பதை விட,எளிய, காஸ்ட் எஃபெக்டிவ் பிராஸஸ் கருங்கல் தரையில் நடப்பது. கோயிலை ஐம்பது சுற்று சுற்றுகிறேன், நூறு சுற்று சுற்றுகிறேன் என்றெல்லாம் வேண்டிக் கொண்டு சுற்றிவிட்டு உடலும் மனமும் ஆரோக்யமாக இருப்பதை வியப்பார்கள். அந்தப் பலனை ஆண்டவனுக்கு அட்ரிப்யுட் செய்வார்கள். மலைகளில் கோயில்கள் அமைத்ததற்கும், பிரஹாரங்களைக் கருங்கல் கொண்டு அமைத்ததற்கும் காரணம் அக்யூபிரஷர் என்பதை அறிக. வாரம் ஒரு முறையாவது மலையில் அமைந்த கோயில் ஒன்றுக்குப் போய் வாருங்கள்,உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும்

Leave a Reply