shadow

மதுவுக்கு எதிராக உண்மையிலேயே போராடுகிறாரா கோவன்? ஒரு சாமானியனின் கேள்வி
kovan1
 “மூடு டாஸ்மாக்கை மூடு” பாடல் புகழ் பாடகர் கோவன் சமீபத்தில் தேச விரோத சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். விடுதலையாகிய பின்னர் திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர்களை சந்தித்து மதுவுக்கு எதிரான தனது போராட்டங்களுக்கு ஆதரவு கேட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் இவரை மதுவுக்கு எதிராக போராடு சமூக அக்கறையுள்ளவராக பார்த்த விமர்சகர்கள் இவரது தற்போதைய நடவடிக்கையை பார்த்து இவரது மனதுக்குள்ளும் அரசியல் ஆசை வந்து விட்டதோ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

ஜெயிலுக்கு போய்விட்டு வந்ததை வடிவேலு பாணியில் விளம்பரம் தேடும் வகையில் இவரது செயல்பாடுகள் இருப்பதாக ஃபேஸ்புக்கில் பலர் கருத்து கூறி வருகின்றனர்.

மதுவை ஒழிக்க போராடுவதாக கூறும் கோவன், மதுவை முதன்முதலில் தமிழக மக்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்த திமுக கட்சி தலைவரை சந்தித்தது விளம்பரம் அன்றி வேறு என்ன? என்ற கேள்வி எழுகிறது.

அதேபோல் சட்டமன்றத்திற்கே குடித்துவிட்டு வந்தவர் என முதல்வரால் குற்றம் சாட்டப்பட்ட விஜயகாந்தை  சந்தித்து தனது பாடல்கள் அடங்கிய குறுந்தகடுகளை வழங்கியுள்ளார்.

இவர் அரசியலுக்கு வருவது குறித்து யாருக்கும் எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை. ஆனால் மதுவுக்கு எதிராக போராடுபவர் என்று தன்னைத்தானே விளம்பரப்படுத்திக்கொள்ளும் போக்கை கைவிட வேண்டும் என்பதே பலரது கோரிக்கை.

உண்மையிலேயே இவருக்கு மதுவுக்கு எதிரான போராட்டம் நடத்த வேண்டும் என்ற எண்ணமிருந்தால் மது ஆலைகளை நோக்கி இவரது போராட்டம் திரும்பட்டும்.

கருணாநிதி, விஜயகாந்த் போன்ற அரசியல் தலைவர்களை சந்தித்து மதுவுக்கு எதிரான தனது போராட்டங்களுக்கு ஆதரவு கேட்பதற்கு பதிலாக விஜய் மல்லையா, Amit Dahanukar, Lalit khaitan போன்றவர்களை சந்தித்து மது உற்பத்தியை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டிருந்தால் இவர் மீது மக்களுக்கு உண்மையிலேயே மரியாதை ஏற்பட்டு இருக்கும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து.

kovan

English Summary: Kovan is really struggle against liquor?

Leave a Reply