shadow

 kothapayaஇலங்கை அதிபர் தேர்தலின் முதல் முடிவு வெளிவர தொடங்கியதும், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செயலாளரும், ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்ச, மனைவியுடன் மாலத்தீவில் தஞ்சமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஒரு விமானத்தில் கோத்தபய சென்றதால் விசா தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் கோத்தபய குடும்பத்தினர் சிங்கப்பூர் சென்றதாகவும், ஆனால் விசா இல்லாமல் ராணுவ விமானத்தை அனுமதிக்க சிங்கப்பூர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவேதான் கோத்தபய மாலத்திவில் தஞ்சமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மகிந்தா ராஜபக்சேவின் மகன்கள் சீனாவுக்கு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது: தேர்தல் முடிவு தனக்கு சாதகமாக வராத காரணத்தால், அவசரநிலையை பிரகடனம் செய்யவும் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யவும் மகிந்த ராஜபக்ச முயற்சி செய்ததாகவும், ஆனால் அவர் விடுத்த கோரிக்கையை அட்டர்னி ஜெனரல் ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், ரணில் விக்கிரமசிங்கேவை நேரில் சந்தித்த அட்டர்னி ஜெனரல், பாதுகாப்பான இடத்துக்கு ராஜபக்சவை அனுப்பி வைக்க உதவுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது தனது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகே ராஜபக்ச அதிபர் பதவியிலிருந்து விலக முன்வந்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்தை கலைக்கவும் ராஜபக்ச திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply