shadow

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 8 டீன் ஏஜ் தென்கொரிய பெண்கள் கைது. பாலியல் தொழிலாளிகள் என சந்தேகம்

shadow

தென்கொரியாவில் இருந்து ஆல்பம் ஒன்றின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்ற 8 இளம்பெண்களை பாலியல் தொழிலாளிகள் என சந்தேகம் அடைந்து அமெரிக்க போலீஸார் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை தென்கொரியாவில் இருந்து 16 முதல் 21 வயதுடைய எட்டு இளம்பெண்கள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமானத்தில் வந்து இறங்கினர். அவர்களின் உடைமைகளை சோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள் அதிகளவு மேக்கப் பொருட்கள் இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்தனர்.

இதையடுத்து அமெரிக்க போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணைக்கு மொழி ஒரு தடையாக இருந்த நிலையில் எட்டு பெண்களும் பாலியல் தொழில் செய்பவர்கள் என சந்தேகம் அடைந்த போலீஸார் அவர்களை கைது செய்ததாக தெரிகிறது.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் இந்த பெண்களை அமெரிக்காவுக்கு அனுப்பிய ஒரு இசை நிறுவனம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் போலீஸார் எட்டு இளம்பெண்களையும் விடுதலை செய்துள்ளனர். இதுகுறித்து தென்கொரியா திரும்பியவுடன் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இளம்பெண்கள் தெரிவித்துள்ளனர்.

English Summary: Korean Girl band arrested at US airport after being mistaken for Prostitutes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *