shadow

shadow

கடந்த ஒரு மாதமாக நடந்த வந்த ஐ.பி.எல் தொடர் கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டம் நேற்று பெங்களூரில் நடந்தது. இந்த போட்டியில் ஷாருக்கானின் கொல்கத்தா அணியும்,பிரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணியும் பலப்பரிட்சை நடத்தின.

டாஸ் வென்று பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர் கேட்டுக்கொண்டார். சென்னை அணிக்கு எதிராக அதிரடி சதம் அடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற உதவிய சேவாக், இந்த போட்டியில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். வோரா 67 ரன்களும், சாஹா 115 ரன்களும் எடுத்தனர். இந்த தொடரின் நாயகன் மற்றும் அதிரடி மன்னன் மாக்ஸ்வெல், முக்கியமான இறுதிப்போட்டியில் முதல் பந்திலேயே அவுட் ஆகி பிரித்தி ஜிந்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இறுதியில் பஞ்சாப் அணி , நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்தது.

பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, பாண்டே மற்றும் யூசுப் பதானின் அதிரடியால் 19.3 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்து ஐ.பி.எல் 7 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது. பாண்டே 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாம தேர்ந்தெடுக்கப்பட்டார். பஞ்சாப் வீரர் மாக்ஸ்வெல் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply