shadow

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியை கொல்கத்தா விடம் படுதோல்வி அடைந்தது அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. படிக்கல் மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடி 22 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் 93 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 10 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இதனையடுத்து அந்த அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி உள்ளது

வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் புள்ளி பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.