shadow

குஜராத் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா

ஐபிஎல் 2017 கிரிக்கெட் போட்டியில் முதல் இரண்டு போட்டியில் ஐதராபாத் மற்றும் புனே அணிகள் வெற்றி பெற்ற நிலையில் நேற்று இரவு 3வது போட்டி நடந்தது, இந்த போட்டியில் கொல்கத்தா மிக அபாரமாக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்தது,. அந்த அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா 68 ரன்கள் குவித்தார். 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 184 ரன்கள் குவித்தது. இந்த அணி 14.5 ஓவர்கள் மட்டுமே வெற்றிக்கு எடுத்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் காம்பீர் 76 ரன்களும், லின் 93 ரன்களும் எடுத்தனர். லின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் புனே அணிகள் மோதவுள்ளன

Leave a Reply