shadow

   CLT20 M1 KKR v CSK
சேம்பியன் லீக் இருபது ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகள் நேற்று முதல் ஆரம்பமானது. விறுவிறுப்பாக நடந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

நேற்று ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான சேம்பியன் லீக் இருபது ஓவர்கள் போட்டியின் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் காம்பீர் முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. தோனி 35 ரன்களூம், ரய்னா, பிராவோ தலா 28 ரன்களும் எடுத்தனர்.

CLT20 M1 KKR v CSK
பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.  4.4 ஓவர்களில் 21 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்துக்கொண்டிருந்த கொல்கத்தா அணியை ten Doeschate மற்றும் Russellஆகியோர்களின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்றது. Russell58 ரன்களும், ten Doeschate 51 ரன்களும் எடுத்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 19 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் விருது Russell அவர்களுக்கு வழங்கப்பபட்டது.

CLT20 M1 KKR v CSK

cricket 1

CLT20 M1 KKR v CSK

Leave a Reply