shadow

ஓவியாவை காப்பாத்தறதை நிறுத்துங்கள்: ஒரு கொக்கரக்கோவின் கூவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் இன்று வரை ஓவியாவுக்கு ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. சமூக வலைத்தலங்களில் எங்கு பார்த்தாலும் ஓவியாவுக்கு ஓட்டு போட சொல்லி பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஓவியாவுகு ஓட்டுபோட சொல்லி ஒருசில ஓட்டல்கள், ஸ்வீட் ஸ்டால்களின் பில்லில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூரை சேர்ந்த கொக்கரக்கோ என்ற ஓட்டலின் பில்லை ஓவியாவுக்கு ஓட்டு போட்டு காப்பத்துறதை நிறுத்துங்கள் என்றும், அதற்கு பதிலாக நெடுவாசலையும், கதிராமங்கலத்தையும் விவசாயிகளையும் காப்பாற்றுங்கள் என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் இளம்பரிதி கூறுகையில்,” கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலியம் முதலீட்டு மண்டலம் அமைக்கும் வேலையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. நெடுவாசல், கதிராமங்கலம் விவசாயிகள் வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டுக்கு எது தேவையோ அதை சிந்தித்துப் பார்க்காமல், இளைய சமுதாயம் திசை திருப்பப்படுகிறது. தேவையில்லாதவற்றைத் தலையில்வைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள். என்னால் முடிந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டுமென்று நினைத்தேன். அன்றாடப் போராட்ட வாழ்க்கைக்கிடையே களத்தில் இறங்கி வேலைபார்க்க முடியவில்லை. என்னால் முடிந்த சிறிய முயற்சி இது ” என்றார்.

 

Leave a Reply