சயானின் மனைவி, மகளின் கழுத்தில் வெட்டுக்காயம்! போஸ்ட்மார்ட்டம் தகவலால் பரபரப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் தேடப்பட்ட கனகராஜ் ஏற்கனவே சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், மற்றொரு தேடப்பட்ட குற்றவாளியான சயான் குடும்பத்துடன் காரில் சென்ற போது அந்த காரும் பாலக்காடு அருகே விபத்தில் சிக்கியது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

அதுமட்டுமின்றி, சயானின் மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க படுகாயங்களுடன் சயான் உயிர்தப்பி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தற்போது பிரேத பரிசோதனையில், சயானின் மனைவி, மகள் கழுத்தில் கத்தி வெட்டுக்காயம் இருப்பதாகவு இதனால் இது விபத்தா? கொலையா? அல்லது என்கவுண்டரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விபத்து நடந்தவருக்கு எப்படி வெட்டுக்காயம் ஏற்படும் என்று சயானின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே இதுகுறித்து மேலும் விசாரணை செய்ய கேரள தனிப்படை போலீசார் கோவை விரைந்துள்ளனர்.கோவை மருத்துவமனையில் தான் சயானி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.,

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *