3d invitation

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியிருக்கும் கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீடு வருகிற 9ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த் இந்த விழாவுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் தீவிரமாக இருக்கிறார்.

கோச்சடையான் பாடல் வெளியீடு அழைப்பிதழ் மிகவும் ஸ்பெஷலாக சீனாவில் இருந்து தயாராகி வந்தூள்ளதாம். இந்த அழைப்பிதழை திறந்தால் கோச்சடையான் படத்தின் ரஜினி ஸ்டில் 3D வடிவில் ஒளிரும் வண்ணம் மிகவும் பிரமாண்டமாக இருந்ததாம். அழைப்பிதழை பார்த்த ஒவ்வொரு வி.ஐ.பியும் செளந்தர்யாவின் ஐடியாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்கள்.

அழைப்பிதழிலேயே பிரமாண்டத்தை கொடுத்துள்ள செளந்தர்யா, கண்டிப்பாக படத்தையும் பிரமாண்டமாக கொடுத்திருப்பார் என கோலிவுட் மிகுந்த எதிர்பார்ப்புடன் கோச்சடையான் பட ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கின்றது.

Leave a Reply