kochadaiyaan-tracklistகோச்சடையான் படத்தின் பாடல்கள் வரும் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அந்த படத்தில் என்னென்ன பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் மொத்தம் 8 பாடல்களுக்கு டியூன் போட்டுள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் பாடிய பாடகர்கள் குறித்த ஒரு தகவல்:

1. முதல் பாடல் எங்கே போகுதோ வனம் என்று தொடங்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியது. பாடல் எழுதியவர் வைரமுத்து. இந்த ஒரு பாடல் மட்டும் ஏற்கனவே ரிலிஸ் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2. ” மெதுவாகத்தான்” என்று தொடங்கும் டூயட் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் சாதனா சர்கம் பாடியுள்ளனர். பாடலை எழுதியவர் வாலி.

3. மாற்றம் ஒன்றுதான் என்ற பாடலை ரஜினிகாந்த், ஹரிசரண் மற்றும் ஜதி ஆகியோர்கள் பாடியுள்ளனர்.

4. மணப்பெண்ணின் சத்தியம் என்று தொடங்கும் 4வது பாடலை ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் பாடியுள்ளார்.

5. இதயம் என்று தொடங்கும் 5வது பாடலை சின்மயி மற்றும் ஸ்ரீனிவாஸ் பாடியுள்ளனர்.

6. எங்கள் கோச்சடையான் என்று தொடங்கும் 6 வது பாடல் குழுவினர்கள் சேர்ந்து பாடியுள்ளனர்.

7. மணமகனின் சத்தியம் என்று தொடங்கும் 7வது பாடலை ஹரிசரண் பாடியுள்ளார்.

8. கர்மவீரன் என்று தொடங்கும் க்ளைமாக்ஸ் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.ஆர்.ரஹானா ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

மேற்கண்ட 8 பாடல்களில் மெதுவாகத்தான் என்ற பாடலைத்தவிர மற்ற அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கசிந்துள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *